/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜாதிவாரி கணக்கெடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
/
ஜாதிவாரி கணக்கெடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
ADDED : ஜூலை 07, 2025 02:18 AM
மதுரை : மதுரை செல்லுாரில் சமூகநீதி கூட்டமைப்பு, சீர்மரபினர் நலச்சங்கம் சார்பில் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
மூத்த தலைவர்கள் மகேந்திரன், தியாகு, கொளத்துார் மணி, அய்யாகண்ணு துவக்கி வைத்தனர்.
68 சீர்மரபினர் சமூகங்களுக்கு ஒரே டி.என்.டி., சான்று வழங்காதது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை சரிவர நடத்த, முறையான ஓ.பி.சி., பட்டியலைத் தயாரித்து தெளிவான வழிகாட்டுதல் வெளியிட வேண்டும்.
தமிழக அரசு ஜாதிவாரியாக, சமூக, கல்வி, பொருளாதாரக் கணக்கெடுப்பு நடத்தி 69 சதவீத இடஒதுக்கீட்டை முறைப்படுத்த வேண்டும். அதனை மருத்துவப்படிப்பில் முழுமையாக செயல்படுத்த வேண்டும்.
அரசு பணிகள், கல்வியில், மட்டுமின்றி தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பில் அனைத்து சமூகங்களும் சரியான புள்ளி விவரங்களை பதிவு செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.