/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மழையால் கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சி
/
மழையால் கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சி
ADDED : ஜன 08, 2024 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகள் ஆடு, மாடுகள் வளர்க்கின்றனர். இவற்றுக்கு அதிகளவில் தீவனம் தேவைப்படுகிறது. வயல்வெளிகளில் புற்கள் இல்லாத வறட்சி காலங்களில் தீவனத்திற்காக அதிக செலவாகிறது. இதனால் பலர் கால்நடைகளை விற்கும் அவலமும் நிகழும்.
தற்போது பருவமழை கலத்தில் பெய்த மழையால் மேய்ச்சல் நிலங்களில் புற்கள், தாவரங்கள் அதிகளவில் முளைவிட்டுள்ளன.
இவை வரும் சில மாதங்களுக்கு கால்நடைகளுக்கு போதுமானதாக இருக்கும். அதுவரை விலை கொடுத்து தீவனங்கள் வாங்க வேண்டியதில்லை என கால்நடை வளர்ப்போர் தெரிவித்தனர்.