தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/இறைச்சிக்கழிவுகளால் இறுதிச்சடங்கில் அவதி

இறைச்சிக்கழிவுகளால் இறுதிச்சடங்கில் அவதி

இறைச்சிக்கழிவுகளால் இறுதிச்சடங்கில் அவதி


UPDATED : நவ 24, 2026 12:44 AM

ADDED : நவ 24, 2026 12:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2026 12:44 AM ADDED : நவ 24, 2026 12:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாலமேடு: பாலமேடு மயானத்தின் அருகே இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதால் இறுதிச் சடங்குகளின் போது அப்பகுதியினர் சிரமடைகின்றனர்.

இங்கு கள்ளுக்கடை பஸ்ஸ்டாப் அருகே பாலமேடு பேரூராட்சி மயானம் அமைந்துள்ளது. இதனருகே உள்ள கிடங்கில் மலையளவு குப்பை குவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே குப்பை கிடங்கால் துர்நாற்றம் வீசும் நிலையில், அப்பகுதியினர் முறைகேடாக கோழி, இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதால் ஏற்படும் துர்நாற்றத்தால் இறுதி சடங்கிற்கு வருவோர் அவதியுறுகின்றனர்.

அப்பகுதி ஆண்டிச்சாமி கூறியதாவது: சில மாதங்களுக்கு முன்புதான் புதிய மயானம் பயன்பாட்டுக்கு வந்தது. மயானத்தின் அருகே குப்பை கிடங்கு உள்ளதால் துர்நாற்றம் வீசும். இப்பகுதியினர் பலர் இறைச்சி கழிவுகளை இங்கு கொட்டுகின்றனர். இதனால் துர்நாற்றத்தால் இறுதிச்சடங்குக்காக வருவோர் முகம் சுளிக்கின்றனர்.

இவற்றில் உருவாகும் கிருமிகள் காற்றில் கலந்து நோய்களை பரப்புகின்றன. இவற்றை உண்பதற்கு வரும் தெருநாய்கள் சண்டையிடுவதால் மனிதர்களை கடிக்கும் அபாயம் உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us