ADDED : பிப் 03, 2024 04:12 AM
அ நிறம் | அளவு
வாடிப்பட்டி : வாடிப்பட்டி வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 10 விவசாயிகளின் 46 ஆயிரத்து 840 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன. 21 வியாபாரிகள் பங்கேற்றனர். மட்டையுடன் கூடிய தேங்காய் ஒன்று ரூ.6.00 முதல் ரூ.13.65 வரை விலை போனது.
ஏலம் மூலம் ரூ.3 லட்சத்து 38 ஆயிரத்து 252க்கு வர்த்தகம் நடந்தது. மேலும் 17 விவசாயிகளின் 1876 கிலோ கொப்பரை ஏலத்தில் 6 வியாபாரிகள் பங்கேற்றனர். கிலோ ரூ.40.80 முதல் ரூ.86.60 வரை விலை போனது ரூ.ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 83க்கு வர்த்தகம் நடந்தது.
