ADDED : ஆக 06, 2025 08:38 AM

அ நிறம் | அளவு
மதுரை : சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த பேராசிரியை நிகிதாவின் காரிலிருந்த நகை திருடு போனது. கோயில் காவலாளியாக இருந்த அஜித்குமாரை ஜூன் 27ல் திருப்புவனம் போலீசார் விசாரித்தனர். தனிப்படை போலீசார் தாக்கியதில் அவர் இறந்தார்.
போலீஸ்காரர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன் கைதாகினர். சி.பி.ஐ., போலீசார் விசாரிக்கின்றனர். கண்ணன் உட்பட 5 போலீசாரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க மதுரை (சி.ஜெ.எம்.,) நீதிமன்றத்தில் சி.பி.ஐ., தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.நீதிபதி செல்வபாண்டி விசாரித்தார். ஐந்து பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை விசாரிக்க அனுமதித்த நீதிபதி இன்று (ஆக.6) மாலை 5:30 மணிக்கு ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
