/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருப்புவனம் அஜித்குமாரின் தம்பி உட்பட 6 பேரிடம் சி.பி.ஐ., 9 மணி நேரம் விசாரணை
/
திருப்புவனம் அஜித்குமாரின் தம்பி உட்பட 6 பேரிடம் சி.பி.ஐ., 9 மணி நேரம் விசாரணை
திருப்புவனம் அஜித்குமாரின் தம்பி உட்பட 6 பேரிடம் சி.பி.ஐ., 9 மணி நேரம் விசாரணை
திருப்புவனம் அஜித்குமாரின் தம்பி உட்பட 6 பேரிடம் சி.பி.ஐ., 9 மணி நேரம் விசாரணை
ADDED : ஜூலை 19, 2025 03:38 AM

மதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அஜித்குமார் 29, போலீஸ் விசாரணையில் இறந்தது குறித்து விசாரிக்கும் சி.பி.ஐ., நேற்று தனது மதுரை அலுவலகத்தில் அஜித்குமார் தம்பி நவீன்குமார் உட்பட 6 பேரிடம் ஒன்பது மணி நேரம் விசாரணை நடத்தி எழுத்துப்பூர்வமாக பதிவு செய்தது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாரை ஜூன் 27ல் நகை காணாமல் போனது தொடர்பாக மதுரை திருமங்கலம் பேராசிரியை நிகிதா புகாரில் போலீசார் விசாரித்தனர். ஜூன் 28ல் தனிப்படை போலீசார் விசாரணையில் அஜித்குமார் இறந்தார். கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு 5 போலீசார் கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டு, டி.எஸ்.பி., ரோஹித்குமார் தலைமையிலான குழு விசாரித்து வருகிறது.
சிறையில் உள்ள போலீசார் ஆனந்த், கண்ணன், பிரபு, ராஜா சங்கர மணிகண்டன் ஆகியோரது அலைபேசிகளை ஆய்வு செய்தனர். நேற்று திருப்புவனம் ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், கோயில் உதவிகமிஷனர் ஓட்டுனர் கார்த்திக்வேல், சக ஊழியர்கள் பிரவின்குமார், வினோத்குமார், அஜித்குமாரின் தம்பி நவீன்குமார் ஆகியோர் மதுரை ஆத்திக்குளத்தில் உள்ள சி.பி.ஐ., அலுவலகத்தில் ஆஜராகி சம்பவம் குறித்து விவரித்தனர். தனிப்படை போலீசாரின் வாகன ஓட்டுநரான 6வது போலீஸ்காரர் ராமச்சந்திரனிடமும் நேற்று சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்தனர். 9 மணி நேரம் விசாரணைக்கு பின் நேற்றிரவு 7:30 மணிக்கு அனைவரும் புறப்பட்டு சென்றனர்.
ராஜா மனைவியிடம் விசாரணை
ஜூலை 17ல் திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனில் சி.பி.ஐ., போலீசார் ஆறு மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். பின் இரண்டு சி.பி.ஐ., போலீசார், ஒரு உள்ளுர் பெண் போலீசார் மழவராயனேந்தலில் உள்ள போலீஸ்காரர் ராஜாவின் வீட்டிற்கு சென்று அவரது மனைவியிடம் விசாரணை நடத்தினர். ராஜா மழவராயனேந்தலில் கட்டியுள்ள புது வீடு குறித்தும் விசாரணை நடத்தினர்.