'சொத்து குவிப்பு புகாருக்கு சி.பி.ஐ., விசாரணை தேவை'
'சொத்து குவிப்பு புகாருக்கு சி.பி.ஐ., விசாரணை தேவை'
ADDED : மார் 29, 2026 03:20 AM
மதுரை: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பூலாத்துாரைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
திண்டுக்கல் கலெக்டராக, 2012 முதல், 2014 வரை இருந்தவர் வெங்கடாசலம்.
பின், தேனி கலெக்டராக பணிபுரிந்தார். இவர், பணிக்காலத்தில் வருவாய்க்கு அதிகமாக, மனைவி பெயரில் சட்டவிரோதமாக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் சொத்து சேர்த்துள்ளார்.
இதனால், லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தேன். விசாரணை நிலுவையில் இருந்தபோது, விருப்ப ஓய்வில் செல்ல, வெங்கடாசலம் அனுமதிக்கப்பட்டார்.
இது சட்டவிரோதம். எனவே, அவரது விருப்ப ஓய்வை ரத்து செய்ய வேண்டும்; சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டார்.
நீதிபதி பி.புகழேந்தி, தமிழக பொதுத்துறை செயலர், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர், சி.பி.ஐ., இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, ஏப்., 7ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.
