ADDED : நவ 05, 2024 05:31 AM

அ நிறம் | அளவு
மதுரை: மதுரை கிழக்கு மீனாட்சிபுரம் 7ம் வகுப்பு மாணவி ரூபியா கலெக்டர் சங்கீதாவிடம் நேற்று மனு கொடுத்தார். அவர் கூறியதாவது:
மாங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கிறேன். மீனாட்சிபுரத்தில் உள்ள எங்கள் தெருவில்
10 குடும்பங்களுக்கு ஒரே பொதுப்பாதை மட்டும் உள்ளது. மழை பெய்தால் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகிறது. மதுரை கிழக்கு பி.டி.ஓ.விடம் சாலை அமைக்க என் தந்தை ஆண்டிச்சாமி முறையிட்டார். 'கலெக்டர் அனுமதியளித்தால் ரோடு அமைக்கப்படும்' என பி.டி.ஓ., தெரிவித்துள்ளார்.
எனவே தாமதமின்றி சிமென்ட் ரோடு அமைக்க அனுமதி தரவேண்டும் என மனு கொடுத்தேன் என்றார்.
