நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : டி.கல்லுப்பட்டி ஒன்றியம் வையூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் நுாற்றாண்டு விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் விஜயபார்த்திபன் வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர்கள் சுப்ரமணியன், வடிவேல் பங்கேற்று பேசினர். போட்டிகள், கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். கல்வியாளர் பாஸ்கரன், சமூக ஆர்வலர் குமார், துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பாண்டீஸ்வரன், வேலுச்சாமி, சபரிநாதன், ஆசிரியர் பயிற்றுனர் ராதாகவுரி, கிராம கல்விக்குழு தலைவர் பாண்டிசெல்வி உட்பட பலர் பங்கேற்றனர். உதவி ஆசிரியை பாக்கியலட்சுமி நன்றி கூறினார்.

