ADDED : டிச 08, 2024 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : திருவேடகத்தில் ஜி.எச்.சி.எல்., பவுண்டேஷன், பெட்கிராட் இணைந்து வழங்கிய கம்ப்யூட்டர் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.
நிர்வாக இயக்குனர் சுப்புராமன் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் வசந்தகோகிலா முன்னிலை வகித்தார். பயிற்சியாளர் கீர்த்திராஜ் வரவேற்றார். ஊராட்சி தலைவர் பழனியம்மாள் சான்றிதழ் வழங்கினார்.
பயிற்சிக்கு பின் சுயதொழில், கம்ப்யூட்டர் சென்டர், இ-சேவை மையம் துவங்க மத்திய,மாநில அரசுகளின் மானியத்துடன் வங்கி கடன் பெற ஆலோசனை, சுயதொழில் முனைவோராக மாற அனைத்து உதவிகள் செய்ய தயாராக உள்ளதாக பவுண்டேஷன் நிதி பங்களிப்பு அலுவலர் சுஜின் பேசினார்.
பெட்கிராட் பொருளாளர் சாரள் ரூபி, பயிற்சியாளர் ஷீபா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். ஊராட்சி செயலாளர் சுதா பிரியா நன்றி கூறினர்.