sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 பராமரிப்பு பணிகளால் ரயில் சேவையில் மாற்றம்

/

 பராமரிப்பு பணிகளால் ரயில் சேவையில் மாற்றம்

 பராமரிப்பு பணிகளால் ரயில் சேவையில் மாற்றம்

 பராமரிப்பு பணிகளால் ரயில் சேவையில் மாற்றம்


ADDED : மார் 02, 2026 07:27 AM

Google News

ADDED : மார் 02, 2026 07:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரைக் கோட்டத்தில் நடைபெறும் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

பகுதி ரத்து * மார்ச் 2 (இன்று) முதல் 30 வரை (செவ்வாய் தவிர்த்து) ஈரோடு - செங்கோட்டை (16845), மார்ச் 3 முதல் 31 வரை (புதன் தவிர்த்து) செங்கோட்டை - ஈரோடு (16846) ஆகிய ரயில்கள் திண்டுக்கல் - செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுகின்றன.

* மார்ச் 3, 4, 6ல் செங்கோட்டை - திருநெல்வேலி - செங்கோட்டை (56742/56743) ஆகிய ரயில்கள் சேரன்மகாதேவி - திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படு கின்றன.

* மார்ச் 23, 24ல் மதுரை - ராமேஸ்வரம் - மதுரை (56711/56714) ஆகிய ரயில்கள் ராமநாதபுரம் - ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.

மாற்றுப் பாதை * மார்ச் 3 முதல் 31 வரை, புதன் தவிர்த்து மற்ற நாட்களில் செங்கோட்டை - மயிலாடுதுறை (16848), ஞாயிறு, வியாழக் கிழமைகளில் நாகர்கோவில் - மும்பை சி.எஸ்.எம்.டி., (16352), சனி தோறும் கன்னியாகுமரி - ஹவுரா (12666) ஆகிய ரயில்கள் மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்லும்.

* திங்கள், செவ்வாய் தவிர்த்து மற்ற நாட்களில் குருவாயூர் - சென்னை எழும்பூர் (16128), வெள்ளி தோறும் கன்னியாகுமரி - ஐதராபாத் (07229) ஆகிய ரயில்கள் மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்லும்.

* மார்ச் 14ல் கோவை - நாகர்கோவில் ரயில் (16322) கரூர், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக செல்லும்.

* மார்ச் 18ல் நாகர்கோவில் - கோவை - நாகர்கோவில் (16321/16322), மதுரை - குருவாயூர் (16327), செங்கோட்டை - மதுரை பாசஞ்சர் (56772), பாலக்காடு - திருச்செந்துார் - பாலக்காடு (16731/16732), திருவனந்தபுரம் - திருச்சி (22628) ஆகிய ரயில்கள் மதுரை, மானாமதுரை, விருதுநகர் வழியாக இயக்கப்படும்.

சிறப்பு ரயில் * பயணிகள் வசதிக்காக மார்ச் 3 முதல் 31 வரை (புதன் தவிர்த்து) சிறப்பு ரயில் (06846), அதிகாலை 5:10 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு காலை 9:30 மணிக்கு மதுரை வரும். மார்ச் 2 முதல் 30 வரை (செவ்வாய் தவிர்த்து) சிறப்பு ரயில் (06845) மாலை 6:00 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு இரவு 10:30 மணிக்கு செங்கோட்டை செல்லும்.

திருமங்கலம், விருதுநகர், சாத்துார், கோவில்பட்டி, திருநெல்வேலி, சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், தென்காசி வழியாக செல்லும்.






      Dinamalar
      Follow us