/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குன்றத்தில் தேரோட்டம்: இன்று தெப்பத்திருவிழா
/
குன்றத்தில் தேரோட்டம்: இன்று தெப்பத்திருவிழா
ADDED : ஜன 21, 2024 03:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று தெப்பம் முட்டுத் தள்ளும் நிகழ்ச்சியும், கொட்டும் மழையில் தேரோட்டமும் நடந்தது. இன்று (ஜன.,21) தெப்பத் திருவிழா நடக்கிறது.
சுவாமி, தெய்வானை தெப்பக்குளம் கரையில் எழுந்தருள மிதவை தெப்பத்தில் முகூர்த்தகால் கட்டப்பட்டது. மூங்கிலால் சுவாமி தெப்பத்தை முட்டுத் தள்ளும் நிகழ்ச்சி நடந்தது.
16 கால் மண்டபம் முன்பு அலங்கரிக்கப்பட்டிருந்த சிறிய வைரத் தேரில் சுவாமி, தெய்வானை எழுந்தருள ரத வீதிகளில் தேரோட்டம் நடந்தது.
இரவு தங்கமயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்தார். இன்று காலை தெப்பத்திருவிழா நடக்கிறது.

