நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : திருமங்கலத்தில் மக்காச்சோளம், சோளம், வரகு, பாசிப்பயிறு, பருத்தி உள்ளிட்டவை ஆடிப்பட்டத்தில் விதைக்கப்பட்டன. 2 மாதங்களாக போதிய மழை இல்லை. நடுவக்கோட்டை, கிழவனேரி, பொன்னம்பட்டி, மீனாட்சிபுரம், தங்களாச்சேரி, பேரையூர் தாலுகாவிற்கு உட்பட்ட அப்பக்கரை, தொட்டியபட்டி உள்ளிட்ட கிராமங்களில் மக்காச்சோள பயிர்கள் மழையின்றி கருகி சேதமடைந்தன.
இதனால் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வேளாண் அதிகாரிகள் நிலங்களை பார்வையிட்டு உரிய இழப்பீடு தொகை மற்றும் காப்பீட்டுத் தொகையை வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.

