/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரயில் பயணத்தில் சேட்டை; பெண் புகாரில் முதியவர் கைது
/
ரயில் பயணத்தில் சேட்டை; பெண் புகாரில் முதியவர் கைது
ரயில் பயணத்தில் சேட்டை; பெண் புகாரில் முதியவர் கைது
ரயில் பயணத்தில் சேட்டை; பெண் புகாரில் முதியவர் கைது
ADDED : பிப் 10, 2025 12:19 AM

மதுரை; ரயிலில் சென்ற பெண்ணிடம் தகாத முறையில் நடந்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரையைச் சேர்ந்த 34 வயது பெண் ஒருவர், பிப்., 7 இரவு, 9:55 மணிக்கு சென்னை செல்ல ரயில்வே ஸ்டேஷன் வந்தார். தன் இரு குழந்தைகளுடன் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலின் 'எஸ் 3' பெட்டியில் ஏறினார். புறப்பட்ட அரைமணி நேரத்தில் குழந்தைகளை உறங்க வைத்து விட்டு, மேற்படுக்கையில் உறங்க தயாரானார்.
அதேநேரம், எதிர் படுக்கையில் படுத்திருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த முதியவர் லட்சுமணன், அவரை பார்த்துக் கொண்டே 'தகாத' செயலில் ஈடுபட்டார்.  அவர் செய்கை தொடர்ந்ததால், ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார். இரவு, 11:20 மணிக்கு திருச்சி ஸ்டேஷன் சென்றதும், அங்குள்ள ரயில்வே போலீசார் எஸ் 3 பெட்டிக்கு வந்து விசாரித்தனர். அப்பெண் அடையாளம் காட்டிய லட்சுமணனை கைது செய்தனர்.