/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரசாயனம் கலந்த நீர்: 14 மாடுகள் உயிரிழப்பு
/
ரசாயனம் கலந்த நீர்: 14 மாடுகள் உயிரிழப்பு
ADDED : ஜன 26, 2025 04:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருங்குடி : மதுரை அவனியாபுரம் தர்மர், வில்லாபுரம் அசோக், குதிரைகுத்தி அய்யனார், குரண்டி பெருமாள் உட்பட 6 பேரின் 920 மாடுகள் பெருங்குடி மண்டேலா நகர் பகுதியில் மேய்ச்சலுக்கு விடப்பட்டன. அப்பகுதியில் தேங்கி இருந்த ரசாயன கழிவு நீரை குடித்த 70 மாடுகளில் 14 மாடுகள் சம்பவ இடத்திலேயே இறந்தன. மற்ற மாடுகள் சிகிச்சை பெறுகின்றன.
கால்நடை துறை மண்டல இணை இயக்குனர் சுப்பையன் தலைமையில் உதவி இயக்குனர் டாக்டர் சரவணன், நோய்கள் புலனாய்வு பிரிவு டாக்டர் கிரிஜா, அவனியாபுரம் கால்நடை மருத்துவர் பாபு உட்பட 18 பேர் கொண்ட குழுவினர் இறந்த மாடுகளை உடற்கூராய்வு செய்தனர். பின்பு அருகில் புதைக்கப்பட்டன.

