/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மகப்பேறு வார்டை பார்த்து வியந்த சத்தீஸ்கர் அமைச்சர்
/
மகப்பேறு வார்டை பார்த்து வியந்த சத்தீஸ்கர் அமைச்சர்
மகப்பேறு வார்டை பார்த்து வியந்த சத்தீஸ்கர் அமைச்சர்
மகப்பேறு வார்டை பார்த்து வியந்த சத்தீஸ்கர் அமைச்சர்
ADDED : ஏப் 15, 2025 06:34 AM
மதுரை: மதுரை அரசு மருத்துவமனைக்கு நேற்று வந்த சத்தீஸ்கர் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷியாம் பிகாரி ஜெய்ஸ்வால் மகப்பேறு வார்டின் சுகாதாரத்தை பார்த்து ஆச்சர்யம் அடைந்தார்.
மகப்பேறு பிரிவு, பச்சிளம் குழந்தைகள் பிரிவு, ஐ.சி.யு., பிரிவுகளை அவர் பார்வையிட்டார்.
முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நோயாளிகள் பெறும் பயன்கள் குறித்து அவருக்கு விளக்கப்பட்டது. மகப்பேறு வார்டை பார்த்த போது அங்கு கடைப்பிடிக்கப்படும் சுகாதாரம் அவரை ஆச்சர்யப்படுத்தியது.
எல்லா படுக்கைகளிலும் குழந்தைகள் இருப்பதை பார்த்து சந்தோஷப்பட்டு ஒரு துறை வார்டுக்கே இவ்வளவு பெரிய இடமா என கேட்டறிந்தார்.
டீன் அருள் சுந்தரேஷ் குமார், மருத்துவ கண்காணிப்பாளர் குமரவேல், ஆர்.எம்.ஓ., சரவணன், ஏ.ஆர்.எம்.ஓ.,க்கள் முருகுபொற்செல்வி, சுமதி, மகப்பேறு துறைத்தலைவர் காயத்ரி உடனிருந்தனர்.