ADDED : டிச 20, 2024 03:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியில் இயக்குநர் சண்முகராஜன் தலைமையில் சிட்பண்ட் முதலீட்டின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தமிழ்நாடு சிட்பண்ட் சங்க செயலாளர் செந்தில்குமார், நித்ய கல்யாணி சிட்பண்ட் நிறுவன பொது மேலாளர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் சிட்பண்ட் முதலீட்டின் முக்கியத்துவம் குறித்து பேசினர். இயக்குநர் சுப்பிரமணியன், முத்துக் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.