/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முதல்வர் மருந்தகம் சரவணன் குற்றச்சாட்டு
/
முதல்வர் மருந்தகம் சரவணன் குற்றச்சாட்டு
ADDED : ஏப் 02, 2025 05:02 AM
மதுரை : ''முதல்வர் மருந்தகம் மக்களுக்காகவா, ஸ்டாலின் விளம்பரத்திற்காகவா எனத்தெரியவில்லை. அ.தி.மு.க., திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தும் தி.மு.க., அரசிற்கு மூடு விழா நடத்த மக்கள் தயாராகிவிட்டனர்'' என மருத்துவரணி மாநில இணைச்செயலாளர் டாக்டர் சரவணன் குற்றம்சாட்டினார்.
மதுரையில் அவர் கூறியதாவது: தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் அம்மா மருந்தகத்தை மூட திட்டமிட்டனர். இதற்கு பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்த நிலையில்' மூட மாட்டோம். அதிகப்படுத்துவோம்' என்றனர். இந்த 4 ஆண்டுகளில் எத்தனை அம்மா மருந்தகங்களை அதிகப்படுத்தியுள்ளார்கள் என்று கூற முடியுமா. தற்போது ஸ்டாலின் 1000 முதல்வர் மருந்தகத்தை திறந்து வைத்துள்ளார். இங்கு 3 மாத தேவையான மருந்துகள் பராமரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், சர்க்கரை நோய், பிரஷர் உள்ளிட்ட சில நோய்களுக்கு மட்டும்மருந்துகள் இருக்கின்றன.
பழனிசாமி ஆட்சியில் 2000 அம்மா மினிகிளினிக் திறந்து வைத்தார். மாதந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்றனர். அதை மூடுவிழா நடத்தி விட்டு மக்களை தேடி மருத்துவம் என்று திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள்.
அத்திட்டத்தில் ஒரு நபர் பயன்பெற்றால் அதை மூன்று பேர் பயன்படுவதாக கணக்கு எழுதப்பட்டு வருகிறது என்றார்.

