ADDED : பிப் 24, 2024 04:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி : பறவை பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம் தலைவர் கலாமீனா ராஜா தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் செல்வகுமார் முன்னிலை வகித்தார்.
சமூகநல பணியாளர் வித்யா வரவேற்றார். மாவட்ட குழந்தை பாதுகாப்பு சமூக பணியாளர் அருள்குமார், குழந்தைகள் பாதுகாப்பு, பராமரிப்பு, திருமண தடுப்பு, பாலியல் ரீதியான துன்புறுத்தல், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை, போதை பொருட்களால் ஏற்படும் பிரச்னைகள், ஊட்டச்சத்து குறைபாடுகள் குறித்து விளக்கினார்.
பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். சுகாதாரப் பணி மேற்பார்வையாளர் ராமு நன்றி கூறினார்