ADDED : நவ 24, 2024 05:14 AM
அ நிறம் | அளவு
மதுரை : மதுரை புதுார் தாமரைத்தொட்டி அருகில் உள்ள மாநகராட்சி மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு பூங்கா உள்ளது. அங்கு யூனிசெப், ஆரோக்கியா நலவாழ்வு அறக்கட்டளைகளின் 'பெருமை' திட்டத்தின் கீழ் குழந்தைகள் தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது.
கவிதை வாசித்தல், நடனம், யோகா, சிலம்பம், இசை உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் 160 மாற்றுத்திறன் குழந்தைகள், பெற்றோர் கலந்து கொண்டனர்.
திட்டத்தின் தலைவர் ஜான்டேவிட், நிர்வாக அறங்காவலர் சந்திரசேகர், ஆரோக்கியா அறக்கட்டளை மேலாளர்கள் முத்துராமன், கோகுல், ரியாக்ட் வர்ஷிதா, அபிமன்யூ, யூகேன் அக்கியா குழுவினர், ராமர்பாண்டி, சுரேந்தர், பயிற்சி ஆசிரியை பூங்கொடி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
