/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சமூக விரோதிகளின் கூடாரமான சிறுவர் பூங்கா
/
சமூக விரோதிகளின் கூடாரமான சிறுவர் பூங்கா
ADDED : ஏப் 18, 2025 05:53 AM
திருமங்கலம்: திருமங்கலம் நகராட்சி 5வது வார்டு அசோக் நகர் பகுதியில் நகராட்சி சார்பில் 80 சென்ட் அளவில் சிறுவர் பூங்கா உள்ளது. காலை, மாலையில் சிறுவர்கள் விளையாடவும் முதியவர்கள் 'வாக்கிங்' செல்லவும் பயன்படுகிறது.
6 மாதங்களுக்கும் மேலாக பூங்காவில் மின் விளக்குகள் எரியாமல் இருப்பதால் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. இதனால் குழந்தைகள், பெரியவர்கள் செல்ல அச்சப்படுகின்றனர்.
இதனால் பூங்கா சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. அப்பகுதி மக்கள் கூறுகையில், ''சமூக விரோதிகள் தங்கள் தேவைக்காக மின் இணைப்பை துண்டித்து பூங்காவை இருளில் வைத்து உள்ளனர். இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.

