ADDED : டிச 26, 2024 05:11 AM

வாடிப்பட்டி: வாடிப்பட்டி புனித ஆரோக்கிய அன்னை சர்ச்சில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பு திருப்பலியில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இறைவார்த்தை சபை மாநில தலைவர் சாந்துராஜா தலைமை வகித்தார். திருத்தல பாதிரியார் வளன், மறை மாநில அதிபர் புஷ்பராஜ், திருத்தல நிர்வாக பாதிரியார்கள் ஆன்டனி வினோ, குழந்தை உள்பட பலர் பங்கேற்றனர்.
டிச.24 இரவு 12:00 மணிக்கு இயேசு பிறப்பை அறிவித்து, மின் ஒளியால் அலங்கரித்த குடிலில், குழந்தை இயேசுவை எழுந்தருள செய்து துாபம் காண்பிக்கப்பட்டது. முன்னதாக கிறிஸ்துமஸ் பாடல்கள், கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அதிகாலை 2:00 மணி வரை பிறப்பின் சிறப்புகள் குறித்து கூறும் சிறப்பு திருப்பலி நடந்தது. கேரளா, கன்னியாகுமரி உள்பட பல பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
* திருநகர் சந்தோஷ் பிசியோதெரபி கல்லுாரியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. தாளாளர் நோவா தலைமை வகித்தார். நிர்வாக இயக்குனர் விஜயஸ்ரீ பேசினார். மூன்றாம் ஆண்டு மாணவர்கள் கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடினர். இயேசுநாதர் வாழ்க்கை வரலாறு குறித்த நாடகத்தில் மாணவர்கள் நடித்தனர்.

