/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சர்ச் கட்டுமானம்: தடை கோரி வழக்கு
/
சர்ச் கட்டுமானம்: தடை கோரி வழக்கு
ADDED : நவ 15, 2025 05:14 AM
மதுரை: தென்காசி மாவட்டம் இலத்துார் அருகே நடராஜபுரம் காளிமுத்து. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
இலத்துாரில் கிறித்தவர்களின் வழிபாட்டுத்தலம் உள்ளது.
அதை புனரமைக்கும் பணிக்காக அரசிடம் அனுமதி பெற்றனர். ஆனால் கட்டடத்தை முழுவதும் அகற்றி விட்டு புதிதாக அமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். உள்ளாட்சி அமைப்பிடம் கட்டட வரைபட அனுமதி, கலெக்டரிடம் தடையில்லா சான்று பெறவில்லை. அனுமதியின்றி கட்டுமானம் மேற்கொள்ள தடை விதிக்க
வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சசிகுமார் ஆஜரானார். நீதிபதிகள் தென்காசி கலெக்டர், செங்கோட்டை தாசில்தாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு டிச., 17 க்கு ஒத்திவைத்தனர்.

