தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/சினிமா 14/10

சினிமா 14/10

சினிமா 14/10


UPDATED : அக் 14, 2026 12:00 AM

ADDED : அக் 13, 2026 06:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 12:00 AM ADDED : அக் 13, 2026 06:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவரஞ்சனி மகளும் நடிகையானார்

90களில் பிரபலமான நடிகையாக இருந்தவர் சிவரஞ்சனி. தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த்தை திருமணம் செய்த இவருக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர். மகன் ரோஷன் மேகா ஏற்கெனவே ஹீரோவாகிவிட்டார். இப்போது மகள் மேதா மேகாவும் சினிமாவிற்கு வந்துள்ளார். தெலுங்கில் உருவாகும் படத்தில் நாயகனாக ஜெய் ஜஸ்தி அறிமுகமாக, இவருடன் மேதாவும் அறிமுகமாகிறார். பிரித்வி வனம் இயக்குகிறார். படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.

சிவகார்த்திகேயன் 27 படத்திற்கு சாய் அபயங்கர் இசை

சிவகார்த்திகேயனின் 27வது படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க, கயாடு லோகர் நாயகியாக நடிக்கிறார். விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ள நிலையில் இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். முதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்திற்கு இவர் இசையமைக்கிறார். சூர்யா, அல்லு அர்ஜூன், தனுஷ், சிவகார்த்திகேயன் என சாய் அபயங்கர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களை கைப்பற்றி வருகிறார்.

இந்தவார வெளியீடு படங்கள்

இந்தாண்டு சரஸ்வதி, ஆயுத பூஜை பண்டிகை அக்., 19, 20 தேதிகளில் வருவதால் சனி, ஞாயிறு உடன் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதை கருத்தில் கொண்டு வசூலை அள்ளலாம் என அக்., 15ல் ரஜினியின் ஜெயிலர் 2 படம் ரிலீஸாகிறது. இதன் உடன் பெரிய படங்கள் வரவில்லை. மாறாக அக்., 16ல் ‛டிரோன்ஸ், டைட்டானிக் காதலும் கவுந்து போகும்’ ஆகிய சின்ன படங்களும், தெலுங்கு டப்பிங் படமான ‛ரணபாலி’யும் ரிலீஸாகிறது.

ஒரே சந்திப்பு : விஜய் தேவரகொண்டா நெகிழ்ச்சி

நட்சத்திர தம்பதியரான விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஜோடி சென்னையில் முதல்வர் விஜய்யை அவரது இல்லத்தில் சந்தித்தனர். விஜய் தேவரகொண்டா வெளியிட்ட பதிவில், ‛‛விஜய் சாருடன் அழகான தருணம். அவரது வேலைக்கு இடையே எங்களை அன்போடு வரவேற்று வாழ்க்கை, பணி உள்ளிட்டவைகளை பகிர்ந்து கொண்டார். ஒரே ஒரு சந்திப்பிலேயே எனக்கு மிகவும் பிடித்தமான ஒருவராகிவிட்டார்'' என குறிப்பிட்டுள்ளார்.

ஜெய் ஜோடி டெல்னா டேவிஸ்

டிவி தொடர்களில் நடித்து வந்த நடிகை டெல்னா டேவிஸ் தற்போது நடிகர் ஜெய்க்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார். பெயரிடப்படாத இந்த படத்தை சிவ பிரசன்னா இயக்குகிறார். ஹாரர் காமெடி பாணியில் இப்படம் உருவாகிறது. தென்காசியில் படப்பிடிப்பு தொடங்கியது. இது தவிர இன்னும் சில படங்களில் ஜெய் நடிக்கிறார்.

அஜய் தேவ்கனுக்கு முதல் ரூ.500 கோடி வசூல் படம்

அபிஷேப் பதக் இயக்கத்தில், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண், தபு உள்ளிட்டோர் நடிப்பில் அக்., 2ல் வெளியான ஹிந்தி படம் திரிஷ்யம் 3. ஆரம்பம் முதலே வரவேற்பை பெற்ற இப்படம் உலகளவில் 500 கோடி வசூலைக் கடந்துள்ளது. அஜய் தேவ்கனுக்கு இது முதல் ரூ.500 கோடி படமாகும். அதுமட்டுமல்ல இந்தாண்டில் இதுவரை வெளியான ஹிந்தி படங்களில் அதிக வசூலைக் குவித்த படங்களில் இது இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

தயாரிப்பாளரை கடனாளியாக்கிய இயக்குனர் யார்

திரையரங்க உரிமையாளர்கள் சங்க முன்னாள் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் ஒரு பேட்டியில், ‛‛70 சதவீதம் முடிந்த ஒரு படத்தை ஹீரோவும், இயக்குனரும் சரியில்லை என கூறி மீண்டும் படப்பிடிப்பு நடத்தியதால் அந்த பட தயாரிப்பாளர் ரூ.9 கோடி கடனில் சிக்கினார்’’ என பெயரை குறிப்பிடாமல் பேசியது வைரலானது. அந்த நபர் இயக்குனர் இன்னாசி பாண்டியன் தான் என வலைதளங்களில் பேசப்பட்ட நிலையில், இயக்குனர் அஜய் ஞானமுத்து வெளியிட்ட பதிவில், ‛‛ஒருவர் மீது பழி சுமத்துவதற்கு முன் உண்மையை ஆராய வேண்டும். வதந்தி பரப்பாமல் ஆதாரங்களுடன் உண்மையை வெளிப்படுத்த வேண்டும்’’ என பதிவிட்டார். இதற்கு இன்னாசி பாண்டியன், ‛‛இது முதலில் நம்புவதற்கு உகந்ததா. இது வெறும் மொட்டைகடிதாசி. அதிகாரப்பூர்வமான நிலையை எட்டினால், அப்போது பேச காத்திருக்கிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us