தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/சினிமா 15/10

சினிமா 15/10

சினிமா 15/10


UPDATED : அக் 14, 2026 06:21 PM

ADDED : அக் 14, 2026 06:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 06:21 PM ADDED : அக் 14, 2026 06:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

‘தி ராஜா சாப்’ தோல்வி : தயாரிப்பாளர் பதில்

பிரபாஸ் நடிப்பில் பான் இந்தியா படமாக இந்தாண்டு பொங்கலுக்கு வந்த ‛தி ராஜா சாப்’ படம் தோல்வியை தழுவியது. இதுபற்றி இதன் தயாரிப்பாளர் டிஜி விஸ்வபிரசாத் கூறுகையில், “நெருக்கடியான ஒரு காலக்கட்டத்தில் படத்தை வெளியிட்டது தான் நாங்கள் செய்த தவறு. வேறொரு தேதியில் படம் வெளியாகி இருந்தால், அதன் முடிவு வேறாக இருந்திருக்கும்” என்றார்.

ஒன்பது மாதங்களாக புதுப்படத்திற்கு ஒப்புக் கொள்ளாத மிருணாள்

‛சீதா ராமம்’ படம் மூலம் தெலுங்கு, தமிழில் வரவேற்பு பெற்றவர் பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூர். இவர் கூறியதாவது: ‛‛கடந்த ஒன்பது மாதங்களாக நான் எந்த படத்திலும் ஒப்பந்தமாகவில்லை. அர்த்தமுள்ள ஒரு கதாபாத்திரத்திற்காக காத்திருக்கிறேன். இனி எந்தவொரு அறிவிப்பும் எனது சமூக ஊடகப் பக்கத்தில்தான் வெளியாகும்’’ என்றார். அல்லு அர்ஜூனின் ‛ராக்கா’ படத்தில் இவர் நடிப்பதாக தகவல் வந்தாலும் படக்குழு உறுதி செய்யவில்லை.

ஆர்யாவின் ‘ஹலோ காதல்’ டிச., 4ல் ரிலீஸ்

மலையாள இயக்குனர் நிகில் முரளி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஹலோ காதல்’. இது கதாநாயகனாக ஆர்யா நடிக்கும் 40வது படமாகும். இதில் நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா நாயகிகளாக நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். சிறிய இடைவெளிக்கு பிறகு ஆர்யா நடிப்பில் முழுநீள காதல் படமாக உருவாகி உள்ளது. படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள சூழலில் டிச., 4ல் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.

மோகன்ஜிக்கு கார்த்திக் சுப்பராஜ் கண்டனம்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ‘டோரதி’ படத்தில் திருநங்கைகள் குறித்து பேசப்பட்டது. இதனை விமர்சித்த இயக்குனர் மோகன்ஜி, ‘2ம் பாகம் எடுத்தால் அவர்கள் எப்படி வாழ்வார்கள். என்ன செய்வார்கள். நீங்கள் திருமணம் செய்து என்ன செய்யப் போகிறீர்கள்,’ என ஒரு திருநங்கை உடனான விவாதத்தில் பேசியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த கார்த்திக் சுப்பராஜ், ‘‘அவரது கேள்வியின் நோக்கம் குழந்தை பெற்றுக் கொள்ள முடியுமா என்பதுதான். இது கேள்வியல்ல, பயங்கரமான அவமதிப்பு. குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதவர்கள் வாழவே தகுதியற்றவர்களா. இது திருநங்கைகள் மீதான மனரீதியான வன்முறை. இதை கண்டிக்கிறேன்’’ என்றார்.

‛மண்டாடி’ வில்லன் நடிக்கும் புதிய படம்

‛மண்டாடி’ படத்தில் வில்லனாக நடித்த சுஹாஸ், ‛ஹைட் அண்ட் சில்க்’ என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும், முக்கிய வேடங்களில் தனிகெல்லா பரணி, நந்து, கருணாகரனும் நடிக்கின்றனர். ராஜேந்திர பாலா இயக்குகிறார். இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கில் தயாராகிறது. பட்டுப்புடவை நெய்யும் நெசவாளரின் வாழ்க்கை பின்னணியில் அதன் உடன் காதல் படமாக உருவாகிறது.

‛தி டர்ட்டி பிக்சர் 2’ உருவாகிறது

நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை தழுவி ஹிந்தியில் ‛தி டர்ட்டி பிக்சர்’ படம் 2011ல் வெளியானது. இதில் அவரது வேடத்தில் நடித்த வித்யாபாலன் தேசிய விருது வென்றார். இந்த படத்தின் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் சமீபத்திய பேட்டியில், ‛‛நான் தயாரிக்க உள்ள முக்கியமான படங்களில் ஒன்று ‛தி டர்ட்டி பிக்சர் 2’.

15 ஆண்டுகளுக்கு பின் இப்போது தான் அதற்கு சரியான கதை அமைந்தது. இரண்டாம் பாகத்திலும் ஒரு பெண்ணின் வாழ்க்கை மற்றும் அவர் எதிர்கொண்ட போராட்டங்கள் மையக்கருவாக இருக்கும்’’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us