தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/சினிமா 24/11

சினிமா 24/11

சினிமா 24/11


UPDATED : நவ 23, 2026 06:51 PM

ADDED : நவ 23, 2026 06:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 06:51 PM ADDED : நவ 23, 2026 06:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

2026ல் 100 கோடி வசூலித்த 9வது படம் ‘ஓம்’

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்முட்டி, சாய்பல்லவி நடித்த ‛ஓம்’ படம் நவ., 20ல் வெளியானது. மூன்று நாட்களில் இப்படம் 100 கோடி வசூலைக் கடந்துள்ளது. இதன்மூலம் தமிழில் இந்தாண்டில் 100 கோடி வசூலித்த 9வது படமாக இது அமைந்துள்ளது. இந்த பட்டியலில் ‛‛ஜெயிலர் 2, ஜனநாயகன், கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ், சீன், மண்டாடி, பராசக்தி, டிசி’’ ஆகிய படங்கள் உள்ளன.

நவம்பர் 27ல் 13 படங்கள் ரிலீஸ்

இந்தவாரம் நவம்பர் 27ல் “606, சிட்டுக்குறிஞ்சி, டெலிவரி பாய், கோ 2 கோ, ஜெடூசி, மதுர மோசடி, மின்னும் ஓர் இரவு, மௌன மொழிகள், நெல்லை பாய்ஸ், பேய் பிடிச்சிருக்கு, நிறம், வட மஞ்சுவிரட்டு, சிக்னல் அட் 11:30” ஆகிய 13 தமிழ் படங்கள் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தாண்டில் இந்தவாரம் தான் இவ்வளவு படங்கள் வெளியாகின்றன. அதோடு இந்தவாரத்துடன் சேர்த்து 2026ல் படங்கள் வெளியீடு 200ஐ தாண்டுகின்றன.

ரிவைசிங் கமிட்டிக்குச் செல்லும் ‘மக்கள் காவலன்’

சந்தோஷ் குமார் இயக்கத்தில், மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மக்கள் காவலன்’ படம் டிசம்பர் 4ல் ரிலீஸாகிறது. படத்தை தணிக்கைக்கு அனுப்பியபோது, அதில் இடம்பெற்றுள்ள அரசியல் ரீதியான சில காட்சிகள், வசனங்களுக்கு ஆட்சேபணை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து படத்தை மறு தணிக்கைக்காக ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பியுள்ளனராம். இதனால் ரிலீஸ் தள்ளிப்போகலாம்.

மணிப்பூர் பெண்ணாக பவானிஸ்ரீ

தரணி ராசேந்திரன் இயக்கி உள்ள படம் ‛டெத் ரயில்வே’. சசிகுமார், சமுத்திரகனி, பவானிஸ்ரீ நடித்துள்ளனர். பவானிஸ்ரீ கூறுகையில், ‛‛இரண்டாம் உலகப்போர் காலக்கட்டத்தில் பர்மா வழியாக ஜப்பான் படையெடுத்து வந்த நிகழ்வுகளை வைத்து இப்படம் உருவாகி உள்ளது. இதில் தமிழர்கள் 1.5 லட்சம் பேர் இறந்ததாக சொல்கிறார்கள். மணிப்பூர் பெண்ணாக நடித்துள்ளேன். இதற்காக அந்த இன பெண்கள் எப்படி அமர்வார்கள், பேசுவார்கள், எந்தமாதிரி உடை அணிவார்கள் உள்ளிட்ட விஷயங்களை கற்றுக் கொண்டேன். விடுதலை படத்திற்குபின் இப்படிப்பட்ட கதையில் நடிப்பது மகிழ்ச்சி’’ என்றார்.

ரன்வீர் சிங்கிற்கு சச்சின் அழைப்பு

1983ல் கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முதல் உலககோப்பையை வென்றது. இதை தழுவி ‛83’ என்ற படம் 2021ல் வெளியானது. கபில் தேவ் வேடத்தில் ரன்வீர் சிங் நடித்தார். மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் சச்சின் டெண்டுல்கர், ரன்வீர் சிங் கலந்து கொண்டனர். சச்சின் பேசும்போது, கபில்தேவ் வேடத்தை கச்சிதமாக செய்திருந்தீர்கள். அவரது பந்துவீச்சு ஸ்டைலும் பக்காவாக பொருந்தியிருந்தது. எப்போதாவது வலைப் பயிற்சிக்கு வந்து எனக்கும் பந்து வீசுங்கள் என ரன்வீர் சிங்கிற்கு அழைப்பு விடுத்தார். அதற்கு ரன்வீர் சிங் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.

தன் வாழ்க்கையை தானே படமாக எடுத்த நடன இயக்குனர்

பாலிவுட்டின் முன்னணி நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா. தமிழில் ரவுத்திரம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் தனது வாழ்க்கையை கணேஷ் : டஸ்ட்டு டு ஸ்டார்டஸ்ட் என்ற பெயரில் படமாக இயக்கி உள்ளார். சிவான்சு சோனி, அலோக் ஷா, சுகன்யா கலன் நடித்துள்ளனர். தனது திரைப் பயணத்தில் சந்தித்த சிரமங்கள், தியாகங்கள் மற்றும் சாதனைகளின் அடிப்படையில் இப்படத்தை உருவாக்கியுள்ளார். டிச.11-ல் வெளியாகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us