/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரேஷன் பொருளுக்காக உயிரை பணயம் வைக்கும் பொதுமக்கள்
/
ரேஷன் பொருளுக்காக உயிரை பணயம் வைக்கும் பொதுமக்கள்
ADDED : அக் 16, 2025 05:08 AM
மேலுார்: மேலுாரில் சிதிலமடைந்த தண்ணீர் தொட்டியின் கீழ் செயல்படும் ரேஷன் கடையால் கார்டுதாரர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது.
மேலுார் நகராட்சி அலுவலகம் எதிரே திருவாதவூர் ரோட்டோரம் வேளாண் விளை பொருள் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ரேஷன் கடை செயல்படுகிறது. இங்கு மார்க்கெட், சாலக்கிரையான், கடலை கார தெருவை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கார்டு தாரர்களாக உள்ளனர்.
பத்தாண்டுகளாக காய்கறி மார்க்கெட் வாடகை கட்டடத்தில் இயங்கியது. புதிதாக மார்க்கெட் கட்டுவதற்கு ஓராண்டுக்கு முன் கடை இடிக்கப்பட்டதால், தற்போது சிதிலமடைந்துள்ள தண்ணீர் தொட்டியின் கீழ் செயல்படுகிறது.
கார்டு தாரர்கள் கூறியதாவது: தொட்டியின் மேல் பகுதியில் அரச மரம் முளைத்து கட்டடத்தில் வெடிப்பு ஏற்பட்டு சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுவதால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. பொருட்கள் வாங்க திறந்தவெளியில் காத்து கிடக்கிறோம். ரோட்டோரம் ரேஷன் கடை செயல்படுவதால் விபத்து அபாயம், போக்குவரத்து நெரிசல் உள்ளது. உயிர் பலி ஏற்படும் முன்பு புதிய ரேஷன் கடை கட்ட வேண்டும் என்றனர்.
மேலுார் வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், கடைக்கு வாடகை கட்டடம் கிடைக்காததால் தண்ணீர் தொட்டியின் கீழ் நடத்துகிறோம். கடையின் மோசமான நிலை குறித்து உயரதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றனர்.