/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சிட்டி ஸ்போர்ட்ஸ் பள்ளிகளுக்கான கிரிக்கெட்
/
சிட்டி ஸ்போர்ட்ஸ் பள்ளிகளுக்கான கிரிக்கெட்
ADDED : நவ 20, 2024 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாணிக்கம் ராமசாமி கல்லுாரியில் பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடந்தது.
மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 14 அணிகள் நாக் அவுட் முறையில் பங்கேற்றன. மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்க இணைச் செயலாளர் ராம் டிட்டோ துவக்கி வைத்தார். இதில் மதுரை கிரேஸ் மெட்ரிக் பள்ளி முதல் இடம், திண்டுக்கல் பிரசித்தி வித்யோதயா பள்ளி 2ம் இடம் பெற்றன.
கல்லுாரி இயக்குனர் கலைச்செல்வன், முதல்வர் பத்மாவதி, துணை முதல்வர் அருணா கலந்து கொண்டனர். உடற்கல்வி இயக்குனர் கவுதம், துணை உடற்கல்வி இயக்குனர் கற்பக ஜோதி போட்டிகளை நடத்தினர்.