
பாலமேடு: உத்தரபிரதேசத்தில் 8வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் கூடைப்பந்து போட்டி நடந்தது.
11,14, 17 மற்றும் 19 வயது பிரிவுகளில் போட்டிகள் நடந்தது. மதுரை, தேனி, தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை மாவட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பாலமேடு பத்ரகாளியம்மன் பள்ளி, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, அவனியாபுரம் சங்கரநாராயணா, அமுதம் பள்ளி மாணவர்கள் 11 வயது பிரிவில் தேனி, தஞ்சாவூர், சிவகங்கை மாணவர்களுடன் சேர்ந்து வெண்கல பதக்கம் பெற்றனர். 14 வயது பிரிவில் தேனி, சிவகங்கை மாணவர்களுடன் சேர்ந்து வெள்ளி பதக்கம் வென்றனர்.
17 வயது பிரிவில் தேனி மாணவர்களுடன் தங்கப்பதக்கம், 19 வயது பிரிவில் தேனி, திருச்சி மாணவர்களுடன் தங்கப்பதக்கம் வென்றனர்.
வென்ற மாணவர்களுக்கு பதக்கம் உ.பி., கூடைப்பந்து சங்க செயலாளர் உமேஷ் வழங்கினார். பாலமேடு ஜெராஜ் ஸ்கேட்டிங் ஸ்போர்ட்ஸ் அகாடமி பயிற்சியாளர் பிரபாகரன், பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகத்தினர், பெற்றோர்கள் மாணவர்களை பாராட்டினர்.

