
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் மதுரை வருவாய் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது.
இதில் மேலஅனுப்பானடி தாய் கலை சிலம்பம் மற்றும் கிராமியக்கலைக்கூடம் மாணவ, மாணவியர் 6 பேர் தங்கம், ஒரு வெள்ளி, 5 வெண்கல பதக்கம் வென்றனர். அவர்களையும், பயிற்சியாளர் திங்களரசனையும் கீரைத்துறை இன்ஸ்பெக்டர் பெத்துராஜ் தலைமையில் எஸ்.ஐ.,க்கள் சந்தான போஸ், செல்வம் பாராட்டி பரிசு வழங்கினர்.