/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
துாய்மை விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் -
/
துாய்மை விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் -
ADDED : செப் 20, 2024 05:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை ரயில்வே கோட்டத்தில் இருவார துாய்மை விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக நேற்று சுகாதார மாரத்தான் ஓட்டம் நடந்தது.
கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலக முகப்பிலிருந்து ரயில்வே காலனிக்குள் 5 கி.மீ., துார மாரத்தான் ஓட்டம் நடந்தது. கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா துவக்கி வைத்து ஓட்டத்தில்பங்கேற்றார்.
இந்நிகழ்வில் ரயில்வே ஊழியர்கள், ரயில்வே இருபாலர் பள்ளி, தெற்கு ரயில்வே மகளிர் நலச் சங்க பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். கோட்ட ஊழியர் நல அதிகாரி சங்கரன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரி குன்டேவார் பாதல் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.