/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரயில்வே கோட்டத்தில் துாய்மை பிரசாரம்
/
ரயில்வே கோட்டத்தில் துாய்மை பிரசாரம்
ADDED : ஆக 02, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை ரயில்வே கோட்டம் சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 3 மாத துாய்மை பிரசாரம் துவங்கப்பட்டது. கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா தலைமையில் அதிகாரிகள், ஊழியர்கள் உறுதிமொழி எடுத்தனர்.
முதல் கட்டமாக ஆக.1 முதல் 15 வரை ஸ்டேஷன் வளாகங்கள், தண்ட வாளங்களில் குப்பை அகற்றும் பணி நடக்கிறது. 2வது கட்டமாக ஆக. 16 முதல் 31 வரை ரயில்கள், ஸ்டேஷன்கள், அலு வலகங்களில் துாய்மை பணி நடக்கிறது.
உள்கட்டமைப்பை மேம்படுத்தும் 'கதி சக்தி' முதன்மை திட்ட மேலாளர் ஹரிகுமார், முதுநிலை கோட்ட இயந்திரவியல் பொறியாளர் முகமது ஜுபீர், கோட்ட இயந்திரவியல் பொறி யாளர் குன்டேவார் பாதல், கோட்ட ஊழியர் நல அதிகாரி சங்கரன் பங்கேற்றனர்.