/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
துாய்மை நகர் பட்டியல்: மதுரைக்கு 21வது இடம்
/
துாய்மை நகர் பட்டியல்: மதுரைக்கு 21வது இடம்
ADDED : ஜன 13, 2024 03:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, : மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள துாய்மை நகர் பட்டியலில்மாநில அளவில் 21, தேசிய அளவில் 311வது இடங்களிலும் மதுரை தேர்வு பெற்றுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் துாய்மை நகர் பட்டியலை மத்திய அரசு வெளியிடுகிறது.
இதில் நகர்களில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மை, பொது கழிப்பறைகள் பராமரிப்பு, தரம் பிரித்து குப்பைகள் அகற்றம், மழைநீர் வடிகால்கள் சுத்தம் செய்தல், குடியிருப்புகளில் மேற்கொள்ளப்படும் துாய்மை பணி உள்ளிட்டவை கணக்கில்கொள்ளப்படும்.
இதன் அடிப்படையில் 2023ல் தேசிய அளவில் மதுரை 311வது இடத்திலும், மாநில அளவில்21வது இடத்திலும் தேர்வு செய்யப்பட்டுஉள்ளது.