/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கப்பலுார் சிட்கோவில் ஆக்கிரமிப்பு அகற்றம்
/
கப்பலுார் சிட்கோவில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : செப் 20, 2024 05:39 AM
திருமங்கலம் : தமிழ்நாட்டின் 2வது பெரிய சிட்கோ தொழிற் பேட்டை கப்பலுாரில் உள்ளது. 550 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த தொழிற்பேட்டையில் சிறிதும் பெரிதுமாக 350 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன.
இங்கு கனரக வாகனங்கள் செல்வதற்கு ஏற்ற ரோடு வசதி இல்லை. 30 ஆண்டுகளுக்கு முன் அமைத்த ரோடுகளே தற்போது வரை பயன்பாட்டில் உள்ளன. இதனால் கனரக வாகனங்கள் செல்ல இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் ரோடுகளை ஆக்கிரமித்து தனியார் கடைகள் நிறைய இருந்தன. இந்த கடைகளை அகற்றக்கோரி சிட்கோ நிர்வாகம் சார்பில் பலமுறை அறிவிப்பு விடுத்தும் யாரும் அகற்றவில்லை.
இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த 13க்கும் மேற்பட்ட கடைகள், கட்டடங்களை நேற்று போலீஸ் பாதுகாப்போடு அகற்றினர். இதுபோல பல்வேறு இடங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும். தற்போது குண்டும் குழியுமாக உள்ள ரோடுகளை சீரமைத்து கனரக வாகனங்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் அகலப்படுத்த வேண்டும் என பல்வேறு நிறுவன உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.