ADDED : அக் 10, 2025 03:09 AM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: சோழவந்தான் பசும்பொன்நகர் அருகே வாடிப்பட்டி ரோடு மோசமாக சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளித்தது.
இதனால் டூவீலரில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து காயம் அடைந்தனர். மற்ற வாகனங்கள் தடதடத்து செல்லும் நிலை இருந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. உடனே செயல்பட்ட அதிகாரிகள் பள்ளங்களை சரி செய்தனர். அப்பகுதி மக்கள் தினமலர் நாளிதழுக்கு மகிழ்ச்சியுடன் நன்றி கூறினர்.
