நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: திருப்புகழ் சபையின் 106வது ஆண்டு விழாவை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோயில் ஆடி வீதியில் உள்ள மதுரை திருவள்ளுவர் கழகத்தில் திருவிளையாடல் புராண விரிவுரை நடந்தது.
நவ.14 முதல் 19 வரை நடந்த இந்நிகழ்ச்சி நிறைவு விழாவில் அறங்காவலர் குழுத்தலைவர் ருக்மணி தலைமை வகித்தார்.
சபை பொருளாளர் செந்தில் சுப்பிரமணியன் வரவேற்றார். திருப்புகழ் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப் பட்டது. ஆடிட்டர் சீத்தாராமன், செயலாளர் லோகநாதன் பங்கேற்றனர்.

