ADDED : செப் 25, 2026 05:11 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் காந்தியின் 106வது ஆண்டு ஆடை புரட்சி தினம் குறித்த கருத்தரங்கு நடந்தது.
கல்வி அலுவலர் நடராஜன் பேசுகையில் ''ஐந்து முறை காந்தி மதுரைக்கு வந்துள்ளார். இரண்டாவது முறை வந்தபோது அவர் மேற்கொண்ட ஆடைப் புரட்சியின் மூலம் உலகத் தலைவர் என்ற நிலைக்கு உயர்ந்தார்'' என்றார். ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ் பேசுகையில், ''காந்தியின் ஆடைப் புரட்சி இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு திருப்பு முனையாக அமைந்தது.
எளிமை, அகிம்சை, உண்மை, சுதேசியின் அடையாளமாகவும் இந்திய கலாசாரத்தின் அங்கமாகவும் கருதப்பட்டது'' என்றார். மீனாட்சி அரசு கல்லுாரி, பாத்திமா கல்லுாரி, யாதவர் கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர். செயலாளர் நந்தாராவ் ஏற்பாடு செய்திருந்தார்.
