ADDED : மார் 20, 2024 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : விருதுநகர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் சட்டசபை தொகுதியில் உள்ள பி.கே.என்., ஆண்கள் பள்ளி வளாகத்தில் உள்ள ஓட்டு சாவடிகளை விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் நேற்று ஆய்வு செய்தார்.
ஓட்டு சாவடியில் உள்ள பாதுகாப்பு பெட்டக வசதிகள், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை வைக்கும் அறையை ஆய்வு செய்தார். பின்னர் கள்ளிக்குடியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள மையத்தையும் ஆய்வு செய்தார். துணைத்தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தி, தாசில்தார் மானேஷ்குமார் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

