/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உள்ளக குழு அமைக்க கலெக்டர் உத்தரவு
/
உள்ளக குழு அமைக்க கலெக்டர் உத்தரவு
ADDED : ஆக 27, 2025 01:03 AM
மதுரை; மதுரை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 10க்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் பணிபுரியும் அனைத்து அலுவலகங்களிலும் பாலியல் வன்கொடுமையில் இருந்து பெண்களை பாதுகாக்க உள்ளக குழு (இன்டேர்னல் கமிட்டி) கட்டாயம் அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகள், மருத்துவமனைகள், பள்ளி, கல்லுாரிகள், கடைகள், பயிற்சி நிறுவனங்கள் என அரசு, அரசு சாரா நிறுவனங்களில் உள்ளகக் குழுவை உடனே அமைக்க வேண்டும்.
அமைத்த விவரங்களை www.tnswd-poshicc.tn.gov.in மற்றும் www.shebox.wed.gov.in என்ற 2 இணையதளங்களிலும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இக்குழுவில் 50 சதவீதம் இடம்பெற வேண்டும்.
குழுவில் உள்ள உறுப்பினர்களில் ஒருவர் தொண்டு நிறுவனம், சமூக செயல்பாட்டாளர், சட்டவல்லுனர், சமூகப்பணி கல்வியாளர்களைக் கொண்ட உள்ளக குழு அமைக்கப்ப வேண்டும். விதிமுறைப்படி புகார் பெட்டியம் வைக்கப்பட வேண்டும்.
அவ்வாறு உள்ளக குழு அமைக்காத நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். குழுஅமைத்த விவரத்தை மாவட்ட சமூகநல அலுவலகத்திற்கு தபால் மூலமாக, 'மாவட்ட சமூகநல அலுவலகம், மூன்றாவது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், மதுரை - 625 020 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மின்னஞ்சலில் eswomadurai.com என்ற முகவரிக்கும் அனுப்ப வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

