ADDED : ஏப் 16, 2026 10:35 PM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., அலுவலகம் சார்பில் நுாறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் முளைப்பாரி ஊர்வலம் நடத்தினர்.
கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் திரளான பெண்கள் தற்காலிக பஸ்ஸ்டாண்ட் வரை ஊர்வலமாக சென்றனர். பின்பு பொதுமக்கள், அரசு அலுவலர்கள் உறுதிமொழி எடுத்தனர். பாரம்பரிய முறையில் கும்மி அடித்து என் வாக்கு என் கடமை, 100 சதவீதம் வாக்களிப்போம்' என விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி நடந்தது. சோழவந்தான், உசிலம்பட்டி தொகுதிகளின் தேர்தல் பொதுப்பார்வையாளர் வேத்பதிமிஸ்ரா, கலெக்டர் பிரவீன்குமார், தேர்தல் அலுவலர்கள், கட்சிப் பிரமுகர்கள் பார்வையிட்டனர்.
