/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வாடிப்பட்டி தாலுகாவில் 'உங்களை தேடி உங்கள் ஊரில்' கிராமங்களில் கலெக்டர் ஆய்வு

ADDED : பிப் 01, 2024 04:04 AM
வாடிப்பட்டி : தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்த 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' என்ற புதிய திட்டம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது.
இத்திட்டபடி மதுரை கலெக்டர் சங்கீதா நேற்று வாடிப்பட்டி தாலுகா வந்தார். இப்பகுதி கிராமங்களில் வளர்ச்சிப் பணிகளை நேரடியாக கள ஆய்வு செய்தார்.
அய்யங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு வந்தவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
தனிச்சியம் ஊராட்சி அய்யனகவுண்டன்பட்டி ரேஷன் கடை, வாடிப்பட்டி ஒன்றிய அலுவலகம், வட்டார வேளாண் விரிவாக்க மையத்தின் இடுபொருட்கள் இருப்பு, குட்லாடம்பட்டி சமத்துவபுரத்தில் வீடுகளில் மேற்கொண்ட மராமத்து பணிகள், விராலிப்பட்டி ஊராட்சி ஆதி திராவிடர் காலனி மயான தார் சாலை, மேலக்காலில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நிலத் தொகுப்பை ஆய்வு செய்தார்.
அலங்காநல்லுார் அருகே கீழக்கரையில் ஜல்லிக்கட்டு அரங்கத்தில் பல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்தது. டி.ஆர்.ஓ.,சக்திவேல், ஆர்.டி.ஓ., ஷாலினி, பேரூராட்சி உதவி இயக்குனர் சேதுராமன், தாசில்தார் மூர்த்தி, பி.டி.ஓ.க்கள் ரத்தின கலாவதி, கதிரவன், பிரேமராஜன் பலர் பங்கேற்றனர்.
நேற்று மாலை தாலுகா அலுவலகத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற கலெக்டர் சங்கீதா, மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.