/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆன்லைன் மூலம் அனுமதி பெறாத கட்டடங்கள்: கலெக்டர் எச்சரிக்கை
/
ஆன்லைன் மூலம் அனுமதி பெறாத கட்டடங்கள்: கலெக்டர் எச்சரிக்கை
ஆன்லைன் மூலம் அனுமதி பெறாத கட்டடங்கள்: கலெக்டர் எச்சரிக்கை
ஆன்லைன் மூலம் அனுமதி பெறாத கட்டடங்கள்: கலெக்டர் எச்சரிக்கை
ADDED : மே 20, 2025 01:07 AM
மதுரை: மதுரை கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளதாவது: அனைத்து ஊராட்சிகளிலும் மனைப்பிரிவு, கட்டட வரைபட அனுமதியை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில், இணையதளம் மூலமே (சிங்கிள் விண்டோ போர்டல்) விண்ணப்பித்து பெற வேண்டும். நேரடியாக அனுமதி பெற்றிருந்தால் செல்லாது என 1.10.2023ல் அரசாணை வெளியிடப்பட்டு நடைமுறையில் உள்ளது.
எனவே, உள்ளாட்சி அமைப்புகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகள் நேரடியாக அனுமதி பெற்றிருப்பின், அவற்றை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தற்போது 2500 சதுர அடி வரையான மனைப்பரப்பில் 3500 சதுர அடிவரையிலான கட்டட பரப்பில் தரை, முதல்தளம் கொண்ட குடியிருப்பு கட்டடம் கட்டுவதற்கு ஒற்றை சாளர முறையில், சுயசான்றின் அடிப்படையில், நிபந்தனைகளுக்குட்பட்டு உடனடி அனுமதி வழங்கும் நடைமுறை உள்ளது.
இதன்மூலம் விண்ணப்பம், நடைமுறையை எளிமைப்படுத்துதல், அனுமதி பெறுவதில் தாமதத்தை தவிர்த்தல், கட்டணம் செலுத்துவதை எளிமையாக்குதல் போன்ற பயன்கள் உள்ளன. சுயசான்று மூலம் அனுமதி பெற பதிவு செய்யப்பட்ட கட்டட வல்லுனர் கையெழுத்திட்ட திட்ட வரைபடம், பதிவு செய்யப்பட்ட விண்ணப்ப பத்திரம், பட்டா, அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவு ஆவணம், தளபுகைப்படம் தேவை.
இவ்வாறு அனுமதி பெறாத வீடுகள், தொழில் நிறுவனங்கள் மீது வீட்டுவரி, சொத்துவரி வழங்கப்பட மாட்டாது. குடிநீர் இணைப்பு, மின்இணைப்பு துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதி பெறாத கட்டடங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.