ADDED : ஜன 21, 2026 06:10 AM
மதுரை: மதுரை கலெக்டர் பிரவீன்குமார் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தார்.
சொக்கிக்குளம் உழவர்சந்தையில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் நடத்தும் கடைகள், காய்கறி, பழங்கள் குளிர்பதன கிடங்கை பார்வையிட்டார். மக்களிடம் விலை நிலவரம், தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
மதுரை மேற்கு, கிழக்கு ஊராட்சி ஒன்றியங்களுக்காக தலா ரூ.5.90 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டடப் பணிகளை ஆய்வு செய்தார்.
அமெரிக்கன் கல்லுாரி மேல்நிலைப் பள்ளியில் மாணவர் இடைநிற்றல், அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்தது குறித்து கேட்டறிந்தார். சி.இ.ஓ., தயாளன் உடனிருந்தார்.
கே.கே.நகரில் உள்ள மாநில அக்மார்க் தரம்பிரிப்பு ஆய்வகத்தை பார்வையிட்டார். அவர் கூறுகையில், 'அக்மார்க் ஆய்வுக் கூடத்தில் நான்கு ஆண்டுகளில் அதிகபட்சமாக அரிசி 9 லட்சத்து 22 ஆயிரத்து 528 குவின்டால், கடலைமாவு 2 லட்சத்து 46 ஆயிரத்து 545 குவின்டால் அளவுக்கு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.
இத்துடன் தேன், நெய், நல்லெண்ணெய், சீகைக்காய்துாள், பயறு, நறுமணப் பொருட்கள், கோதுமை மாவு, பெருங்காயம், புளி உட்பட உணவுப் பொருட்களும் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன' என்றார்.
பின்னர் சாத்தமங்கலம் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி, அரசு மருத்துவமனையில் போதை மீட்பு சிகிச்சை, மறுவாழ்வு மையத்தை பார்வையிட்டார்.

