நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை கே.எல்.என். பொறியியல் கல்லுாரியில் 31ம் ஆண்டு விழா நடந்தது. முதல்வர் ராம்பிரசாத் ஆண்டறிக்கை வாசித்தார்.
தலைவர் கார்த்திக் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் மின்னணுவியல், தகவல் தொழில்நுட்ப அமைச்சக சவுந்திர பாண்டியன் பேசுகையில், மாணவர்கள் தோல்வியை கண்டு பயம் கொள்ளக்கூடாது. மீண்டும் முயற்சி செய்ய வேண்டும். மாணவர்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு கொடுத்து முன்னேற்றம் காண வேண்டும்' என்றார்.
போட்டியில்வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். செயலாளர் கணேஷ், இணைச் செயலாளர் பாலாஜி உள்பட பலர் பங்கேற்றனர். பேராசிரியர் பிரதீப் கண்ணன் நன்றி கூறினார்.

