ADDED : ஏப் 11, 2026 09:42 PM
அ நிறம் | அளவு
எழுமலை: மல்லப்புரம் திருவள்ளுவர் கலை அறிவியல் மகளிர் கல்லுாரியின் 13வது ஆண்டுவிழா நடந்தது. முதல்வர் செல்வக்குமாரி வரவேற்றார். நிறுவனர் ராமகிருஷ்ணன், நிர்வாகிகள் சுப்பிரமணி, பெருமாள், சென்னக்கிருஷ்ணன், லோகநாதன், செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.
நிர்வாக அலுவலர் சந்திரன், கல்வியியல் கல்லுாரி முதல்வர் கருப்பசாமி, பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் சுபாராஜன், மெட்ரிக் பள்ளி முதல்வர் தனபாக்கியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அனைத்து துறைகளிலும் கூடுதல் மதிப்பெண் பெற்றவர்கள், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர். மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது.
