ADDED : ஏப் 25, 2026 04:24 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை கே.எல்.என். பொறியியல் கல்லுாரியின் 32வது ஆண்டு விழா தலைவர் கார்த்திக் தலைமையில் நடந்தது. முதல்வர் ராம்பிரசாத் வரவேற்றார். செயலாளர் கணேஷ் சிறப்புரையாற்றினார்.
சிறப்பு விருந்தினரான ஜோகோ கார்ப்பரேஷன் லிட்., தயாரிப்பு மேலாண்மை இயக்குநர் ராஜலட்சுமி சீனிவாசன் பேசுகையில், ''நுணுக்கமான தொழில் திட்டமிடல், ஒழுக்கமான செயலாக்கம் மூலம் மாணவர்கள் தங்கள் தொழில் எதிர்காலத்தை முன்கூட்டியே தீர்மானிக்க வேண்டும்'' என்றார். கல்லுாரி பொருளாளர் சிவபிரசாத், உபதலைவர் பன்ஷிதர், இணைச்செயலாளர் பூர்ணிமா, கல்லுாரி நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர். ஒருங்கிணைப்பாளரான எம்.சி.ஏ., இயக்குநர் இளங்கோ நன்றி கூறினார்.
