ADDED : ஏப் 04, 2026 06:30 AM
அ நிறம் | அளவு
மதுரை: எஸ்.ஆர்.எம்., பொறியியல் கல்லுாரி தின விழா நடந்தது. தலைவர் ரவி பச்சமுத்து, மதுரை தலைவர் பத்மபிரியா, மதுரை கல்லுாரி தாளாளர் ஹரிணி மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.
முதல்வர் துரைராஜ் 2024-25 கல்வியாண்டுக்கான ஆண்டறிக்கையை தாக்கல் செய்து, கல்லுாரி செயல்பாடுகளை விளக்கினார்.தலைமை விருந்தினராக எச்.சி.எல்., டெக் நிறுவன அசோசியேட் துணைத் தலைவர் திருமுருகன் சுப்பராஜ் பங்கேற்றார்.
செயற்கை நுண்ணறிவு பற்றியும், எதிர்கால வேலைவாய்ப்புகளில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றியும் விளக்கினர்.மாணவர்கள் வேலைவாய்ப்பை மட்டும் குறிக்கோளாகக் கொள்ளாமல், தொழில் முனைவோர் திறன்களையும் வளர்த்துக்கொள்வது அவசியம் என வலியுறுத்தினார்.துணைமுதல்வர் சம்பத், ஒருங்கிணைப்பாளர் மனோகர் ஏற்பாடு செய்தனர்.
