ADDED : மார் 11, 2024 06:17 AM

அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரி தின விழா தாளாளர் ஹரி தியாகராஜன் தலைமையில் நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் பழனிநாதராஜா ஆண்டறிக்கை வாசித்தார். ஓலா எலக்ட்ரிக் நிறுவன துணைத் தலைவர் தத்தா பேசினார்.
சிறந்த மாணவர்களாக இயந்திரவியல் துறை பிரசாந்த், கணினி அறிவியல் மற்றும் வணிக அமைப்புத்துறை கோகுல்ராஜ், சிறந்த மாணவியர்களாக கணினி அறிவியல்துறை ஹரிணி, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு துறை யாழினி மலர் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கினர். ஒவ்வொரு துறையிலும் சிறந்த மாணவர், பணி ஓய்வு பெறும் பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. பேராசிரியர் ராஜாராம் நன்றி கூறினர்.
