ADDED : மார் 29, 2026 11:20 PM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: கருமாத்துார் அருள் ஆனந்தர் கல்லூரி நாள் விழா நடந்தது. முதல்வர் அன்பரசு ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். அதிபர் பேசில்சேவியர், அந்தோணிசாமி வாழ்த்திப் பேசினர். தலைமை விருந்தினராக ஹிமாச்சல பிரதேசம், சிம்லா, இந்திய மேம்பட்ட ஆய்வு நிறுவன பெல்லோ அருணாசலம் பங்கேற்றார்.
25 ஆண்டுகள் பணியாற்றியோர், ஓய்வு பெறும் ஆசிரியர்கள், பல்வேறு துறைகளில் முதல் 2 இடம் பெற்ற மாணவர்கள், விளையாட்டு துறையில் தேசிய, முதலமைச்சர் போட்டிகளில் பதக்கம் பெற்ற மாணவர்கள், என்.எஸ்.எஸ்., என்.சி.சி., மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கினார். ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் நன்றி கூறினார்.
