ADDED : அக் 20, 2024 04:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம், : மதுரை சவுராஷ்டிரா மகளிர் கல்லுாரி சுயநிதிப் பிரிவு 23வது பட்டமளிப்பு விழா செயலாளர் குமரேஷ் தலைமையில் நடந்தது.
தலைவர் மோதிலால், நிர்வாக குழு உறுப்பினர்கள் பன்ஷிதர், ராமசுப்பிரமணியன், வெங்கடேஸ்வரன், முரளிதாஸ் கலந்து கொண்டனர். 145 மாணவியருக்கு வடமலையான் மருத்துவமனை டாக்டர் கண்ணன் பட்டம் வழங்கினார். பல்கலை அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 8 மாணவிகள், ஒவ்வொரு பாடப்பிரிவிலும் அதிக மதிப்பெண்கள் பெற்ற 39 மாணவியருக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.
மதுரை காமராஜ் பல்கலை விலங்கு உளவியல் மற்றும் உடல் இயங்கியல் துறை உதவி பேராசிரியர் அமுதா கலந்து கொண்டார். பொருளாளர் பாஸ்கர் நன்றி கூறினார்.